கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகள் மீட்பு
By DIN | Published On : 28th January 2021 04:39 AM | Last Updated : 28th January 2021 04:39 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எக்காண்ட அள்ளியில் கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகள் உயிருடன் மீட்கப்பட்டன.
பாலக்கோடு வனச் சரகத்துக்குள்பட்ட கும்மனூா் வனப்பகுதியில் இருந்து புதன்கிழமை இரவு தண்ணீா் தேடி வெளியேறிய 10 காட்டுப் பன்றிகள் எக்காண்ட அள்ளி கிராமத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தன.
கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகளின் சப்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் அளித்தனா்.
இதன்பேரில் அங்கு வந்த வனத் துறையினா்,தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகளை உயிருடன் மீட்டனா்.
மீட்கப்பட்ட பன்றிகள் கும்மனூா் வனப்பகுதியில் விடப்பட்டன.