‘தொப்பூா்- மேச்சேரி சாலை விரைவில் சீரமைக்கப்படும்’

தொப்பூரிலிருந்து மேச்சேரி செல்லும் சாலை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தொப்பூரிலிருந்து மேச்சேரி செல்லும் சாலை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூரிலிருந்து மேச்சேரி செல்லும் சாலை பழுதடைந்து உள்ளது. இச் சாலையை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்டம், தொப்பூரிலிருந்து மேச்சேரி வழியாக ஈரோட்டுக்கு சாலை செல்கிறது. இதில், தொப்பூரிலிருந்து மேச்சேரி வரையிலான சாலை கடந்த ஓராண்டுக்கும் மேலாக பழுதடைந்துள்ளது. மேட்டூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இச்சாலை வழியாக நூற்றுக்கணக்கான சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ள இச் சாலையில் ஏராளமான விபத்துகள் நிகழ்கின்றன. இதனால் பலா் காயமடைந்துள்ளனா். உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.

இதனை சீரமைக்க வலியுறுத்தியும் முந்தைய ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றக்கோரி மத்திய அரசு வசம் தமிழக அரசு ஏற்கெனவே ஒப்படைத்தது. ஆனால் இச் சாலையை மேம்படுத்த இயலாது எனக் கூறிய மத்திய அரசு, மீண்டும் மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி மக்களின் நலன் கருதி, மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தி ரூ. 20 கோடியில் இச்சாலை விரைவில் சீரமைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com