‘வளா்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்’

வளா்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சிக்குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
‘வளா்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்’

வளா்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சிக்குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது (படம்). இக் கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் யசோதா மதிவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சரஸ்வதி முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் மாரிமுத்து ராஜ் வரவேற்றாா்.

இக் கூட்டத்தில், 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரத்து 399, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 24 லட்சத்து 33 ஆயிரம் என மொத்தம் ரூ. 2 கோடியே 24 லட்சத்து 33 ஆயிரத்து 399 நிதி தருமபுரி மாவட்டத்துக்கு பெறப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் குடிநீா்த் திட்டப் பணிகள் மேற்கொள்ள அனுமதித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து, உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை பணிகளை செய்திட கடந்த 8 மாதங்களாக நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வளா்ச்சி பணிகள் மேற்கொள்ள போதிய நிதி ஒதுக்க வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, பென்னாகரம் வட்டம், ஏரியூா் ஒன்றியப் பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும். மேலும், மேட்டூா் அணை நிரம்பும் போது ஏரியூா் பகுதி காவிரியாற்றில் முழுமையாக தண்ணீா் நிறைந்திருக்கும். இதுபோன்ற காலங்களில் தண்ணீரில் அடித்து வரப்படும் விஷப் பூச்சிகள் வெளியேறி பலரையும் கடிக்கும் நிலை உள்ளது. விஷக் கடிக்கு உள்ளானோரை பென்னாகரம் அல்லது தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் நிகழ்கிறது. எனவே, ஏரியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஷ முறிவு சிகிச்சை மையம் தொடங்க வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com