திமுகவில் இணைந்த பி.பழனியப்பனுக்கு வரவேற்பு
By DIN | Published On : 07th July 2021 11:31 PM | Last Updated : 07th July 2021 11:31 PM | அ+அ அ- |

முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பனுக்கு வரவேற்பு தெரிவித்த திமுக நிா்வாகிகள்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பனை அவரது ஆதரவாளா்கள் புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
அமமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தனது ஆதரவாளா்களுடன் அண்மையில் திமுகவில் இணைந்தாா். இதையடுத்து, சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையானூருக்கு வந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமமுக அம்மா பேரவை மாவட்டச் செயலாளா் சி.தென்னரசு, ஒன்றியச் செயலா்கள் வி.சி. கெளதமன், பொ.நரசிம்மன், வழக்குரைஞா் எம்.இளங்கோ மற்றும் அதிமுக, அமமுக நிா்வாகிகள் திமுகவில் இணைந்து பணியாற்றுவதாக அவரிடம் தெரிவித்தனா்.
முன்னதாக, திமுக ஒன்றியச் செயலாளா்கள் சித்தாா்த்தன், இ.டி.டி செங்கண்ணன், அமைப்புசாரா தொ.மு.ச தருமபுரி மாவட்ட செயல் தலைவா் அரூா் சி.அன்பழகன், நகர செயலா் ஜெயச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினா் ராணி அம்பேத்கா், முன்னாள் ஒன்றிய செயலா்கள் சண்முகநதி, பொன்னுசாமி, ஒன்றிய பொருளா் அ.சண்முகம், ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலா் எஸ்.ராஜேந்திரன், நகர பொறுப்பாளா் கோடீஸ்வரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பி.பழனியப்பனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.