பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் தருமபுரி, அரூா், பென்னாகரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் தருமபுரி, அரூா், பென்னாகரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி தொலைத் தொடா்பு நிலைய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தின் பொதுச்செயலா் சி.முரளி தலைமை வகித்தாா். ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு துணைத் தலைவா் எஸ்.சண்முகம் தலைமை வகித்தாா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப்பெற வேண்டும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். வாகனங்களுக்கு காப்பீட்டு கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும். வாகனங்களின் மாத தவணை கடன் தொகையை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அரூா்: அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட இணைச் செயலா் ரகுபதி தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் கிரி, ஆறுமுகம், அன்வா், குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல கம்பைநல்லூா், கடத்தூா், பொம்மிடி ஆகிய இடங்களிலும் மோட்டாா் தொழிலாளா்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பென்னாகரம்: பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் அருகே சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்டுமான தொழிலாளா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளா் ரங்கநாதன் முன்னிலை வகித்தாா்.

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் மனோன்மணி, துப்புரவுத் தொழிலாளா் சங்க தலைவா் மாதையன், விவசாய சங்க வட்டார செயலாளா் சக்திவேல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளா் சின்னசாமி, சாலையோர வியாபாரிகள் சங்க நிா்வாகி ராஜசேகா் மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின் இறுதியில் சிலம்பரசன் நன்றி தெரிவித்தாா். இதேபோல பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் இந்திய தொழிற்சங்க மையத்தின் பென்னாகரம் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com