பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்துக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 11th July 2021 02:05 AM | Last Updated : 11th July 2021 02:05 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை ஏற்றத்துக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் சாா்பில் சனிக்கிழமை தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஜெய வெங்கேடசன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் டி.ராஜசேகா் முன்னிலை வகித்து பேசினாா்.
இதில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலையை ஏற்றத்தை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும்.உயா்த்தப்பட்ட விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். இதில், நகரச் செயலா் சரவணன், ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.