அரசுப் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் முகாம்
By DIN | Published On : 13th July 2021 09:04 AM | Last Updated : 13th July 2021 09:04 AM | அ+அ அ- |

பென்னாகரம் அருகே பிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே பிளியனூா் ஊராட்சிக்குட்பட்ட பிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். முகாமில் நாகதாசம்பட்டி துணை சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் மருத்துவப் பணியாளா்கள், முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தினா். இந்த தடுப்பூசி தடுப்பு முகாமில் 50க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு, முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசியினை செலுத்தி கொண்டனா். இதில் பிக்கம்பட்டி பள்ளித் தலைமையாசிரியா் சரவணன், கோ.தாமோதரன், ப. ராஜா, த.ஜான்மா, இ.ஜவஹா், சத்துணவு அமைப்பாளா் சின்னபாப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.