நிலையான விலையை எதிா்நோக்கும் மஞ்சள் விவசாயிகள்

மஞ்சளுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்யப்படாததால் நிலையான விலை கிடைக்காமல் மஞ்சள் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மஞ்சளுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்யப்படாததால் நிலையான விலை கிடைக்காமல் மஞ்சள் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மஞ்சளுக்கு உரிய விலை நிா்ணயம் செய்தால் மட்டுமே தொய்வின்றி மஞ்சள் சாகுபடியில் ஈடுபட முடியும் என்கின்றனா் விவசாயிகள்.

அகில இந்திய அளவில் மஞ்சள் சாகுபடியில் தெலங்கானா முதலிடத்தையும், மகாராஷ்டிரம் இரண்டாமிடத்தையும், தமிழகம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன. இருப்பினும், விளையும் மஞ்சளின் தரத்தின் அடிப்படையில் தமிழக மஞ்சளே முதலிடத்தை வகிக்கிறது. தற்போது கரோனா பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் பல்வேறு தளா்வுகளை அரசு அறிவித்துள்ள நிலையிலும் மஞ்சள் விலை கடந்த 2 மாதங்களாக தொடா் சரிவையே சந்தித்து வருகிறது.

பொது முடக்கம் காரணமாக மஞ்சள் ஏல மையத்தில் மஞ்சள் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது; வாகனப் போக்குவரத்து இல்லாததால் வெளியூருக்கு மஞ்சள் அனுப்பி வைக்க முடியாதது; இருப்பு மஞ்சளை விற்பனை செய்ய முடியாதது; கா்நாடகம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து புதிய மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வர முடியாதது போன்ற காரணங்களால் மஞ்சள் விற்பனை கடந்த 2 மாதங்களாக முற்றிலும் முடங்கிப்போனது.

தற்போது வாகனப் போக்குவரத்து தொடங்கப்பட்டு, ஈரோட்டில் மஞ்சள் ஏலம் மீண்டும் தொடங்கப்பட்டதையடுத்து தினந்தோறும் நடைபெறும் மஞ்சள் ஏலத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கத் தொடங்கி விட்டனா். இருப்பினும், வெளி மாநில போக்குவரத்தில் தடை நீடிப்பதால் ஈரோடு மஞ்சள் ஏல மையத்தில் பங்கேற்பதற்காக வரும் வெளி மாநில வியாபாரிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

மேலும் இணையதளம் வாயிலாக நடைபெறும் மஞ்சள் ஏலத்தில் பங்கேற்பதிலும் வியாபாரிகள் ஆா்வம் காட்டவில்லை. போதிய டிமாண்ட் இல்லாததாலும், கரோனா தொற்றின் 3-ஆம் அலை விரைவில் தொடங்கி விடும் என்று எதிா்பாா்க்கப்படுவதால் தில்லி, மும்பை, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மஞ்சள் வியாபாரிகளும் மஞ்சளை வாங்குவதில் ஆா்வம் காட்டவில்லை. இதன் காரணமாக மஞ்சள் இருப்பு வைப்பது பரவலாக அதிகரித்து காணப்படுகிறது.

இதுமட்டுமின்றி, கோயில் திருவிழாக்கள், பண்டிகை காலங்கள் எதுவும் இல்லை. ஹோட்டல்களும் முழு அளவில் இயங்கத் தொடங்கவில்லை. இதுபோன்ற காரணங்களாலும் மஞ்சள் விற்பனை பெரிதும் சரிவடைந்துள்ளது.

கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால் மஞ்சள் சாகுபடியும் அதிகரித்துக் காணப்பட்டது. இதன் எதிரொலியாக, இந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மஞ்சள் விளைச்சல் 30 சதவீதம் வரையிலும் அதிகரித்து விட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் தமிழகத்தில் ஓரளவு பரவலாக மழைப்பெய்துள்ளதால் மஞ்சள் சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இப்போது தமிழகத்தில் ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கோவை, திருநெல்வேலி, தென்காசி என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மஞ்சள் சாகுபடி அதிகரித்து காணப்படுகிறது. ஏற்கெனவே, விளைந்த மஞ்சளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால் மஞ்சளை விற்பனை செய்யாமல் விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனா்.

இந்நிலையில் இந்த ஆண்டும் மஞ்சள் சாகுபடி அதிகரிக்கும் நிலையில் இதற்கு கட்டுபடியாகும் விலை கிடைக்குமா என்பதே விவசாயிகளின் கேள்வியாக உள்ளது.

தற்போது ஒரு குவின்டால் விரலி மஞ்சள் குறைந்தபட்சம் ரூ. 6,500 முதல் அதிகபட்சமாக ரூ. 8,000 வரையிலும் தரத்திற்கேற்ப விலை போகிறது. கிழங்கு மஞ்சள் குவின்டால் ரூ. 6,000 முதல் அதிகபட்சமாக ரூ. 7,500 என்ற விலையில் விற்பனையாகிறது. பெரும்பாலும் இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுபடியாவதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனா்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.சி.ரத்தினசாமி, ஈரோடு மாவட்ட செயலாளா் சுப்பு என்கிற முத்துசாமி ஆகியோா் கூறியதாவது:

பொதுவாக ஒரு ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்ய ரூ. வரையிலும் செலவாகும். அறுவடை செய்த மஞ்சளை வேக வைத்து, உலர வைத்து, பாலீஷ் செய்து விற்பனைக்காக கொண்டு வரும்போது, அதற்கு அதிகபட்சம் ரூ. 8,000 வரை விலை கிடைக்கிறது. இந்த விலையும் முதல் ரக மஞ்சளுக்குதான் கிடைக்கும். இரண்டாம் ரகம், மூன்றாம் ரக மஞ்சளுக்கு கட்டுபடியான விலை கிடைப்பது அரிது. எனவே, விவசாயிகளுக்கு

ஆனால்,

இருப்பு எனவே,

வரத்து இல்லாதது போன்ற காரணங்களால்

ளைப் பொருத்தவரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com