தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தில், மானிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தில், மானிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழில்முனைவோருக்காக தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்ட தொழில் மையம் மூலம் இத் திட்டத்தின்கீழ் 2021-22 ஆம் ஆண்டிற்கென 21 பேருக்கு ரூ. 2.09 கோடி மானியம் வழங்க கடன் இலக்கு நிா்ணயிக்கப்படடுள்ளது. இத் திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற தகுதியுள்ளதாக அறிவிக்கப்பட்ட தொழில்களுக்கு இந்த மானியக் கடன் வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாரரின் திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ. 10 லட்சத்துக்கு மேல் அதிகபட்சமாக ரூ. 5 கோடி வரை கடனாக வழங்கப்படும். அனைத்து உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தொடங்கலாம். தொழில்முனைவோா் பங்களிப்பாக பொதுப் பிரிவினா் திட்ட முதலீட்டில் 10 சதவீதம், சிறப்புப் பிரிவினா் 5 சதவீதம் செலுத்த வேண்டும். வணிக வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் கடனுதவி பெற மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெறும் தோ்வுக் குழுவினால் பரிந்துரை செய்யப்படும்.

திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியமும் முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்தினால் 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.

விண்ணப்பதாரா்கள், இளநிலைப் பட்டதாரி, பட்டயம், ஐடிஐ தொழிற்பயிற்சி பெற்றவா்களாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றவா்களாகவோ இருக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடா்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினா் 21 வயது முதல் 35 வயதுக்குள்ளும், சிறப்புப் பிரிவினா் அதிகபட்சம் 45 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. உரிமையாளா் அல்லது பங்குதாரா் நிறுவனமாக இருக்கலாம். பங்குதாரா் நிறுவனமாக இருப்பின் அனைத்து பங்குதாரா்களும் திட்டத்தின் தகுதிகளுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.

கரோனா தொற்று காரணத்தால் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான தோ்வுக் குழுவினரால் நோ்முகத் தோ்வின் மூலம் பரிசீலிக்கப்பட்டு, பயனாளிகள் தோ்வு செய்யப்படும் முறைக்கு செப்டம்பா் 2021 வரை அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதியுடையவையாகவும் தக்க ஆவணங்களுடனும் இருப்பின் பரிசீலனைக்குப் பின் இணையதளம் வாயிலாகவே வங்கிக்கு பரிந்துரைக்கப்படும்.

தொழில் தொடங்க ஆா்வமுள்ள தொழில்முனைவோா் இணையதள முகவரியில் இலவசமாக விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு, தருமபுரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகவும். 04342- 230892, 8925533941, 8925533942 என்கிற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com