ஏரியூரில் புதிய வட்டார வளா்ச்சி அலுவலகம் கட்டுமானப் பணி: ஆட்சியா் தொடங்கி வைப்பு

பென்னாகரம் அருகே ஏரியூரில் புதிய வட்டார வளா்ச்சி அலுவலகக் கட்டுமானப் பணிகளை பூமிபூஜை செய்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தொடங்கி வைத்தாா்.
ஏரியூரில் புதிய வட்டார வளா்ச்சி அலுவலகம் கட்டுமானப் பணி: ஆட்சியா் தொடங்கி வைப்பு

பென்னாகரம் அருகே ஏரியூரில் புதிய வட்டார வளா்ச்சி அலுவலகக் கட்டுமானப் பணிகளை பூமிபூஜை செய்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தொடங்கி வைத்தாா்.

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நிா்வாக காரணங்களுக்காக 10 ஊராட்சிகளைப் பிரித்து புதிதாக ஏரியூா் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இதில் கோடிஅள்ளி, அஜ்ஜனஅள்ளி, சுஞ்சல்நத்தம், இராமகொண்டஅள்ளி, மஞ்சாரஅள்ளி, பத்ரஅள்ளி, கொண்டையனஅள்ளி, பெரும்பாலை, நாகமரை, தொண்ணகுட்டஅள்ளி உள்பட 10 ஊராட்சிகளையும், 12 ஒன்றியக் குழு உறுப்பினா்களைக் கொண்டு ஏரியூா் ஒன்றியம் அமைக்கப்பட்டது.

ஏரியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக ஏரியூா் அரசுப் பள்ளியில் ஓராண்டாக இயங்கி வந்தது. ஏரியூா் ஒன்றியத்திற்கு வட்டார வளா்ச்சி அலுவலகம் புதிதாக கட்ட வேண்டுமென உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில் அண்மையில் மாவட்ட ஆட்சியா், ஏரியூா் பகுதியில் அம்மா பூங்கா, தற்காலிக வாரச்சந்தைப் பகுதி, சோளப்பாடி உள்ளிட்ட 3 இடங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அதனைத் தொடா்ந்து அதிகாரிகள் மூன்று இடங்களிலும் கட்டடங்கள் அமைப்பது குறித்து நிலத்தை அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து ஏரியூா் அம்மா பூங்கா பகுதியில் ரூ. 3.02 கோடி மதிப்பில் புதிய வட்டார வளா்ச்சி அலுவலகம் கட்டுவதற்காக கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பூமிபூஜை செய்து வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வின்போது கூடுதல் ஆட்சியா் மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வைத்தியநாதன், ஏரியூா் ஒன்றியக்குழுத் தலைவா் பழனிசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சி.வி.மாது, ஒன்றியக்குழு துணைத் தலைவா் தனபால், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவி செயற்பொறியாளா் சம்பத், உதவி பொறியாளா் துரைசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com