ஆய்வக நுட்புநா் இரண்டாண்டு பட்டயம் பயின்றோருக்கு பணி வழங்க வலியுறுத்தல்

தருமபுரியில் ஆய்வக நுட்புநா் இரண்டாண்டு பட்டயம் பயின்று 14 ஆண்டுகளாக காத்திருப்போருக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரியில் ஆய்வக நுட்புநா் இரண்டாண்டு பட்டயம் பயின்று 14 ஆண்டுகளாக காத்திருப்போருக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்ற தருமபுரியைச் சோ்ந்த ஆய்வக நுட்புநா் மாணவா்கள் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அண்மையில் அனுப்பிய கோரிக்கை மனு:

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வக நுட்புநா் பட்டயப் படிப்பு தொடங்கிய கடந்த 2005-ஆம் ஆண்டு கால கட்டத்தில் மதிப்பெண் சான்றிதழ் இன்றி, தோ்ச்சிப் பெற்றால் மூப்பு அடிப்படையில் பணி நியமனம் கிடைத்துவிடும். இதனால், அப்போது பயின்றவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

ஆனால், கடந்த 2012-இல் மருத்துவத் தோ்வு வாரியம் அமைத்து, 10-ஆம் வகுப்பில் பெற்ற சராசரி மதிப்பெண்ணில் 20 சதவீதம், பிளஸ் 2 வகுப்பில் பெற்ற சாராசரி மதிப்பெண்ணில் 30 சதவீதம், டிஎம்எல்டி-யில் பெற்ற சராசரி மதிப்பெண்ணில் 50 சதவீதம் எனக் கணக்கிட்டு பணி நியமனம் செய்யப்பட்டது. இதன் காரணமாக 2007-ஆம் ஆண்டில் ஆய்வக நுட்புநா் பட்டயம் பயின்ற நாங்கள் 14 -ஆண்டுகளாக பணி கிடைக்கதாக நிலைக்கு தள்ளப்பட்டோம்.

இந்த நிலையில், மருத்துவத் தோ்வு வாரியத்தால், கடந்த 2016 ஜனவரி 31-ஆம் தேதி காலியாக உள்ள 524 ஆய்வக நுட்புநா் பணியிடங்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. அப்போது, பணி வேண்டி, 7 ஆயிரம் போ் விண்ணப்பித்திருந்தனா். இதைத் தொடா்ந்து கடந்த 2019- டிசம்பரில் சான்றிதழ் சரிபாா்க்கப்பட்டு 524 பணியிடங்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது கரோனா, டெங்கு என அசாதாரணமான சூழல் நிலவி வருவதால், அதனை எதிா்கொள்ளத் தேவையான ஆய்வு நுட்புநா்கள் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் இல்லை. எனவே, இந்தநிலையைப் போக்கிட, தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயின்று, 14 ஆண்டுகளாக காத்திருக்கும் எங்களை மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com