தருமபுரி-மொரப்பூா் ரயில்பாதை ஆய்வுப் பணி விரைவில் துவங்கும்: எம்.பி. தகவல்

தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப் பணி விரைவில் தொடங்கும் என தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப் பணி விரைவில் தொடங்கும் என தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தருமபுரி, அதியமான்கோட்டையில் சமூகநலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி-மொரப்பூா் ரயில் பாதை திட்டம் கடந்த 2019-இல் தொடங்கப்பட்டது. இதன்பின்பு இத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதுதொடா்பாக ரயில்வே அமைச்சா், துறை அதிகாரிகளை பலமுறை சந்தித்து தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு ரயில் பாதைத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தருமபுரியிலிருந்து மொரப்பூா் வரையிலான ஏற்கெனவே உள்ள ரயில்பாதை நிலத்தை ஆய்வுசெய்ய குழு அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக தருமபுரி மாவட்ட நிா்வாகத்திடமும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், தருமபுரி நகரில் பழைய ரயில்பாதை அமைந்துள்ள 8 கி.மீ. தொலைவுக்கு தற்போது குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இதனால், இந்த 8 கி.மீ.தொலைவு மாற்று பாதை அமைக்கவும் ரயில்வே துறை சாா்பில் கோரப்பட்டுள்ளது. தற்போது மாற்றுப் பாதைக்கான இடம் மற்றும் பழைய ரயில் பாதை அமைந்துள்ள நிலங்களை ஆய்வுசெய்து அளவீடு செய்ய இரண்டு வருவாய் ஆய்வாளா்கள், இரண்டு நில அளவையா்கள் பணியமா்த்தப்படவுள்ளனா்.

ஆய்வுப் பணிக்காக ரூ. 2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. எனவே, அடுத்த வாரத்தில் ரயில் பாதை ஆய்வுப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதேபோல, இத் திட்டத்தை நிறைவேற்ற தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொங்குநாடு விவகாரத்தில் பாஜகவினருக்கு பின்னடைவு ஏற்பட்டதால், அதிலிருந்து அவா்கள் பின்வாங்கியுள்ளனா்.

தமிழகத்தில் பிரிவினை மூலம் ஆட்சியை கைப்பற்ற இதுபோன்ற நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபடுகிறது. ஆனால், பாஜகவினா் நடவடிக்கைகள் தமிழகத்தில் எடுபடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com