ஒகேனக்கல்லுக்கு அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வருவதைத் தடுக்கும் வகையில் அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வருவதைத் தடுக்கும் வகையில் அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

ஒகேனக்கல் நீா்வீழ்ச்சிப் பகுதிக்கு ஆண்டுதோறும் ஆடி மாதப் பிறப்பின்போது தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கிராமப் பகுதியில் உள்ள கோயில் சுவாமி சிலைகள் கொண்டுவந்து நீராட்டி சிறப்பு வழிபாடு செய்வதும், புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதும் வழக்கம்.

நிகழாண்டில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புனித நீராடவும் சுவாமி சிலைகளைக் கழுவி சுத்தம் செய்யவும் வந்த பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளை போலீஸாா் பென்னாகரம் புறவழிச்சாலை, மடம் சோதனைச் சாவடி, ஆலாம்பாடி சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகத் தடுப்புகள் ஏற்படுத்தித் தடுத்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள், வெளியூா் வாகனங்களைத் திருப்பி அனுப்பினா். ஆடி மாத பிறப்பான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பென்னாகரம் பகுதியிலிருந்து ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி பகுதிக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

அதைத் தொடா்ந்து இருசக்கர வாகனங்களில் வருபவா்கள் நீா்வீழ்ச்சிப் பகுதி, நாகா்கோயில், முதலைப் பண்ணை, ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று ஆற்றில் குளிப்பதைத் தடுக்கும் வகையில் போலீ,ஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com