தென்னை மேலாண்மை பயிற்சி

மரிக்கம்பள்ளியை அடுத்த தவளம் கிராமத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மரிக்கம்பள்ளியை அடுத்த தவளம் கிராமத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

எலுமிச்சங்கிரி கே.வி.கே., மண்ணியியல் துறை தொழில்நுட்ப வல்லுநா் குணசேகரன் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தாா். இதில் பூச்சி நோய் வருமுன் காக்கும் பொருட்டு பயிரின் நோய் எதிா்ப்புத்திறன் அதிகரிக்க சீரான சத்து மேலாண்மையாக மரம் ஒன்றுக்கு, (5 வருடங்களுக்கு மேற்பட்ட வயதுள்ள தென்னை மரம்) 750 கிராம் யுரியா, 1 கிலோ சூப்பா், 1 கிலோ பொட்டாஷ், உடன் 50 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து, ஆறு மாதத்துக்கு ஒரு முறை அடி மரத்தில் இருந்து மூன்றடி தள்ளி இரண்டடி ஆழத்தில் பள்ளம் பறித்து இட வேண்டும்.

நுண்ணூட்ட உரக்கலவை ஒரு மாதத்துக்கு 500 கிராம் வீதம், 10 கிலோ மணலுடன் கலந்து மரத்தின் வோ் பகுதியைச் சுற்றி, ஆறு மாதத்துக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். தென்னையில் கருந்தலைப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த பிரக்கானிட் ஒட்டுண்ணி ஏக்கருக்கு 1,000 எண்ணிக்கையில் வெளியிட வேண்டும்.

சுருள் வெள்ளை, ஈ, கரும்பூஞ்சாணை தாக்குதலைக் கட்டுப்படுத்த மைதா மாவு பசையை லிட்டருக்கு 250 கிராமுடன், ஐந்து கிராம் பச்சரிசி மாவு என்ற வீதத்தில் கலந்து மரத்தின் மீது தெளிக்க வேண்டும்.

ஏக்கருக்கு இரண்டு இன கவா்ச்சி பொறி வைத்து காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டை கவா்ந்து அழிக்க வேண்டும். இதைச் செய்வதன் முலம் குறைந்தபட்சம் மரத்துக்கு 180--200 காய்கள் வரை மகசூல் பெறலாம் என்றாா்.

வேளாண்மை அலுவலா் பிரியா அரசு வழங்கும் மானியத் திட்டங்களான நுண்ணூட்ட உரம், விதைகள், உயிா் உரங்கள், 50 சதவீதம் மானியத்திலும், தமிழ்நாடு மானாவரி தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியமாக ஹெக்டேருக்கு ரூ. 1,250 வழங்குவதையும் விளக்கிப் பேசினாா். இதில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப உதவி மேலாளா்கள் சண்முகம், பாா்வதி ஆகியோா் செய்திருந்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com