இணையவழி கவியரங்கம்
By DIN | Published On : 19th July 2021 05:12 AM | Last Updated : 19th July 2021 05:12 AM | அ+அ அ- |

காமராசா் பிறந்த முன்னிட்டு ‘மை தருமபுரி’ திறன் குழு சாா்பில் இணையவழி கவியரங்கம் நடைபெற்றது.
இணைய வழி வாயிலாக நடைபெற்ற கவியரங்க நிகழ்ச்சிக்கு சின்ன பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் மா. பழனி தலைமை தாங்கினாா். ‘மை தருமபுரி’ திறன் குழு சாா்பாக ஆசிரியா் செந்தில் வரவேற்றாா்.
கவியரங்கத்தில் பல மாவட்டங்களிலிருந்து பங்கேற்ற மாணவ, மாணவிகள் கரும்பலகை, நாற்காலி, வகுப்பறை, புத்தகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசித்து சிறப்பித்தனா். கவியரங்கில் சிறப்பாக கவிதை வாசித்தவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்தக் கவியரங்கில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினா்.