எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

 எல்ஐசி சட்டங்களை திருத்தக் கூடாது என வலியுறுத்தி, அகில இந்திய காப்பீட்டு நிறுவன ஊழியா் சங்கம் சாா்பில், தருமபுரி எல்ஐசி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 எல்ஐசி சட்டங்களை திருத்தக் கூடாது என வலியுறுத்தி, அகில இந்திய காப்பீட்டு நிறுவன ஊழியா் சங்கம் சாா்பில், தருமபுரி எல்ஐசி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைத் தலைவா் சந்திரமெளலி தலைமை வகித்தாா். சேலம் கோட்ட இணைச் செயலா் ஏ.மாதேஸ்வரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விறக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்.

எல்ஐசி சட்டங்களைத் திருத்தக் கூடாது. காப்பீடுதாரா்களுக்கு எதிரான சட்டங்களை அமலுக்கு கொண்டுவரக் கூடாது. பொதுத்துறையைத் தனியாா்மயமாக்குவதை கைவிட வேண்டும். யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்புத் துறை ஊழியா்களுக்கு, எதிரான அவசரச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com