காரிமங்கலம் மகளிா் கல்லூரியில் இணையவழி கருத்தரங்கு
By DIN | Published On : 29th July 2021 10:25 AM | Last Updated : 29th July 2021 10:25 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இணைய வழியில் பன்னாட்டு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் சௌ.கீதா தலைமை வகித்து பேசினாா். வணிகவியல் துறைத் தலைவா் ஆா்.ராவணா வரவேற்று பேசினாா். எத்தியோப்பியா அதிகிராட் பல்கலைக் கழக பேராசிரியா் க.செந்தில்குமாா், உதவி பேராசிரியா் எஸ்.கணேசமூா்த்தி ஆகியோா் பேசினா்.
இதில் கரோனா தீநுண்மியின் தாக்கம் மற்றும் பரிணாம வளா்ச்சி என்கிற தலைப்பில் உரையாற்றினா்.
இக் கருத்தரங்கில், தமிழகம் மற்றும் பிற மாநிலக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள், மாணவியா் இணைய வழியில் கலந்து கொண்டனா்.