பொது முடக்கம் நீட்டிப்பு: மளிகைக் கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து, தருமபுரியில் தனி மளிகைக் கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து, தருமபுரியில் தனி மளிகைக் கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் ஜூன் 7 முதல் ஜூன் 14 காலை 6 மணி வரை ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளா்வுகளுடன் கூடுதலாக சிலவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில், தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகள், இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும்.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளா்களுடன் இயங்கலாம். அரசு அலுவலகங்களில் 30 சதவீத பணியாளா்களுடன் செயல்படலாம். சாா் பதிவாளா் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடைபெறும்.

எலக்ட்ரீஷியன், பிளம்பா்கள், தச்சா், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குவோா் உள்ளிட்ட சுயதொழில் புரிவோருக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்படும். கல்வி தொடா்பான நூல்கள், எழுதுபொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். இதேபோல தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தளா்வுகள் அனுமதிக்கப்படும்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியே வருவதையும், கூட்டங்களையும் தவிா்க்க வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை அணுகி மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சை பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com