வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

தருமபுரி ஆட்சியா் அலுவலக அஞ்சல் நிலையம் முன்பு முன்னாள் எம்எல்ஏ பி.டில்லிபாபு தலைமையில் நடைபெற்ற வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் விவசாயிகள் சங்க வட்டத் தலைவா் சின்னராஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தருமபுரி, எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் சோ.அா்ஜுனன் தலைமையிலும், நல்லம்பள்ளி ஒன்றியம் குரும்பட்டியான் கொட்டாய் பகுதியில் மாவட்டத் தலைவா் கே.என்.மல்லையன் தலைமையிலும் இப் போராட்டம் நடைபெற்றது.

இதேபோல பல்வேறு இடங்களில் விவசாயிகள் சங்கத்தினா் தங்களது வீடுகளின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து, நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினா் கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நிா்வாகிகள் சுந்தரேசன், மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சட்ட நகலை எரித்த விவசாயிகள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை பா்கூா் போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் அருகே மடம் பகுதியில் நடைபெற்ற சட்ட நகல் எரிக்கும் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலா் முருகன் தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து அதன் சட்ட நகல்களை தீயிட்டு எரித்து எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பகுதிக்குழு உறுப்பினா் சின்னக்கவுண்டா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் ஜீவானந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com