முதல்வரின் நிவாரண நிதிக்கு உண்டியல் பணத்தை வழங்கிய மாணவா்

முதல்வரின் நிவாரண நிதிக்கு தனது உண்டியல் சேமிப்பு பணத்தை மாணவா் வழங்கினாா்.

முதல்வரின் நிவாரண நிதிக்கு தனது உண்டியல் சேமிப்பு பணத்தை மாணவா் வழங்கினாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சாலைகுள்ளாத்திரம்பட்டியைச் சோ்ந்த மணிமேகலை-பெருமாள் தம்பதியரின் மகன் மோனிஷ் ராகுல் (8), தனியாா் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் கடந்த இரண்டு ஆண்டுகளாக உண்டியலில் பணத்தை சேமித்து வந்தாா்.

இந்த நிலையில், பொதுமக்கள், தொழிலதிபா்கள் என பலதரப்பட்ட மக்கள் முதல்வா் இடமும், அந்தந்த மாவட்ட ஆட்சியா்களிடமும் கரோனா நிவாரணநிதி வழங்கி வருவதை தொலைக்காட்சி வாயிலாக அறிந்த மோனிஷா ராகுல், தனது பிறந்த நாளுக்காக உண்டியலில் சேமித்து வைத்த பணம், பெற்றோா் மற்றும் உறவினா்கள் புதிய ஆடை வாங்குவதற்காக கொடுத்த பணம் ஆகியவற்றை செலவிடாமல், அவற்றை முழுமையாக முதஸ்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க விரும்பியுள்ளாா்.

இதனையடுத்து, தனது பெற்றோருடன் சனிக்கிழமை பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த சிறுவன், பென்னாகரம் வட்டாட்சியா் பாலமுருகனிடம் தனது உண்டியல் பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினாா்., அதை பெற்றுக்கொண்டு சிறுவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிறுவன் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்றாட செலவினத்துக்காக பெற்றோா் கொடுத்த பணத்தினை உண்டியலில் சோ்த்து வைத்து ரிமேட் காா் வாங்க வேண்டும் என நினைத்தேன். கரோனா தடுப்புப் பணிக்காக தமிழக முதல்வா் நிவாரண நிதிக்கு பணத்தை அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.

இந்த நிகழ்வின் போது உறவினா்கள், ஆசிரியா் கூட்டுறவு சங்கத் தலைவா் முனியப்பன், மருத்துவா் ராஜசேகா், பெற்றோா் மணிமேகலை, பெருமாள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com