கிராமங்களில் கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் 34 கிராம ஊராட்சிகள் உள்ளன. அரூா் பகுதியில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 55 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கிராமப் பகுதியில் 30-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதில், வீரப்பநாய்க்கன்பட்டியில் 6 பேரும், கைலாயபுரம், பொய்யப்பட்டி, குடுமியாம்பட்டி, கல்லடிப்பட்டி, கெளாப்பாறை, கீரைப்பட்டி, கோட்டப்பட்டி, வேலனூா், சங்கிலிவாடி, செல்லம்பட்டி ஆகிய கிராமங்களில் தலா 2 பேரும் கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனா்.

பொதுமக்கள் அதிகம் வசிக்கும் நகா் பகுதியில் கரோனா தொற்று பரவல் குறைவாக உள்ள நிலையில், கிராமப் பகுதியில் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

எனவே, அரூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், கரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com