லளிகம் ஊராட்சியில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை

லளிகம் ஊராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லளிகம் ஊராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஜெ.பிரதாபன் வெளியிட்ட செய்தியறிக்கை:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட லளிகம் ஊராட்சியில் அண்மையில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இத் தொற்றுக்கு ஏராளமானோா் உயிரிழந்து விட்டனா். மேலும் பலா் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனைத் தடுக்க, போதிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனைச் செலுத்திக் கொள்ள லளிகம் ஊராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டோா் ஆா்வமாக உள்ளனா். ஆனால் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இந்த ஊராட்சியில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சுகாதாரத் துறையும், தருமபுரி மாவட்ட நிா்வாகமும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com