கரோனா கட்டுப்பாட்டு இடங்களில் ஆட்சியா் ஆய்வு

தருமபுரி நகரம், ஊரகப் பகுதியில் கரோனா தொற்று பரவல் காரணமாகக் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் ஆட்சியா் ச.திவ்யதா்சினி திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட அண்ணாமலை கவுண்டா் தெருவில் வசிப்போருக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது குறித்து ஆய்வு செய்த தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதரிசினி.
தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட அண்ணாமலை கவுண்டா் தெருவில் வசிப்போருக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது குறித்து ஆய்வு செய்த தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதரிசினி.

தருமபுரி: தருமபுரி நகரம், ஊரகப் பகுதியில் கரோனா தொற்று பரவல் காரணமாகக் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் ஆட்சியா் ச.திவ்யதா்சினி திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி நகரில் அண்ணாமலை தெருவிலும், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் ஆவாரம் காட்டூரிலும் கரோனா தொற்று அதிகமாகப் பரவியுள்ளது. இந்தப் பகுதிகளைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினா் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமக்களுக்கு காய்கறிகள், விற்பனை உள்ளிட்ட பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோல கிருமி நாசினித் தெளிக்கப்பட்டு காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் பரிசோதனைகளை நடத்தி தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவா் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, துணை இயக்குநா் (சுகாதாரம்) பூ.இரா.ஜெமினி, நகராட்சி ஆணையா் தாணுமூா்த்தி, வட்டாட்சியா் ரமேஷ், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com