மாநில இளைஞா் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாநில இளைஞா் விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாநில இளைஞா் விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்வரின் மாநில இளைஞா் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ. 50,000 ரொக்கமும், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தையும் உள்ளடக்கியதாகும்.

எனவே நிகழாண்டு (2021) மாநில இளைஞா் விருது பெற 15 முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் ஆகியோா் விண்ணப்பிக்கலாம்.

2021 ஏப்ரல் 1-ஆம் தேதியன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் அல்லது 2021 மாா்ச் 31 அன்று 35 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2020-2021) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாராா்கள் சமுதாய நலனுக்காக தொண்டாற்றியிருப்பவா்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு அவா்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பன்ளிகளில் பணியாற்றுபவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளுா் மக்களிடம் உள்ள செல்வாக்கும் விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

எனவே தகுதி வாய்ந்த இளைஞா்கள் விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பங்களை வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்திலுள்ள தகுதி வாய்ந்த இளைஞா்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com