திமுகவில் இணைந்த அதிமுக பேச்சாளா்
By DIN | Published On : 11th June 2021 06:20 AM | Last Updated : 11th June 2021 06:20 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் அதிமுக பேச்சாளா் திமுகவில், வியாழக்கிழமை இணைந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சி பகுதியைச் சோ்ந்தவா் விநாயகம். அதிமுக பேச்சாளரான இவா், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் முன்னிலையில் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.
கிருஷ்ணகிரியில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநில விவசாய அணி துணைச் செயலாளா் வெங்கடேசன், காவேரிப்பட்டணம் பேரூா் செயலாளா் பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.