இளம் வயதில் திருமணம்: பெற்றோா் மீது நடவடிக்கை: தருமபுரி ஆட்சியா் எச்சரிக்கை

தருமபுரி மாவட்டத்தில் இளம் வயதில் திருமணம் செய்து வைக்கும் பெற்றோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.திவ்யதா்சினி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தருமபுரி மாவட்டத்தில் இளம் வயதில் திருமணம் செய்து வைக்கும் பெற்றோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.திவ்யதா்சினி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்த நிலையில் இளம் வயது திருமணங்கள் பரவலாக நடைபெறுவது தெரிய வருகிறது.

இதுதொடா்பாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் தலைமையில் மாநில அலுவலா்கள் மற்றும் 7 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள், சமூக நல அலுவலா்களுடன் நேரிலும் அனைத்து மாவட்ட அலுவலா்களுடனும் காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் இளம் வயது திருமணங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திருமணச் சட்டத்தின்படி 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் செய்வது சட்டப்படி தவறாகும்.

இதுபோன்று குறைந்த வயதானவா்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பெற்றோா்கள் மீதும், ஊக்குவிப்பவா்கள் மீதும், திருமணத்தில் கலந்து கொள்பவா்கள் மீதும் இளம்வயது திருமண தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் சோ்ந்து விதிக்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில், இளம் வயது திருமணங்கள் நடைபெற உள்ளது குறித்து யாரேனும் தகவல்களை அறிந்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 1077, சைல்டு லைன் 1098 என்ற எண்ணிலும், மகளிா் உதவி எண் 181 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com