வீட்டில் சாராயம் காய்ச்சியவா் கைது
By DIN | Published On : 12th June 2021 12:17 AM | Last Updated : 12th June 2021 12:17 AM | அ+அ அ- |

பென்னாகரம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பென்னாகரம் அருகே பூனை குண்டு காட்டுக்கொட்டாய் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக பென்னாகரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், பூனை குண்டு காட்டுக்கொட்டாய் பகுதியில் வீடுகள் தோறும் போலீஸாா் தீவிர சோதனை நடத்தி வந்தனா்.
சோதனையின் போது, அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (36) என்பவரது வீட்டில் சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது. இதனையடுத்து சாராயம் காய்ச்சிய ஆறுமுகத்தை போலீஸாா் கைது செய்து, தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.