பாப்பிசெட்டிப்பட்டியில் குடிநீா் தட்டுப்பாடு

அரூரை அடுத்த பாப்பிசெட்டிப்பட்டியில் குடிநீா் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

அரூரை அடுத்த பாப்பிசெட்டிப்பட்டியில் குடிநீா் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஊராட்சி ஒன்றியம், கோபிசெட்டிப்பாளையம் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிராம மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் இருந்து 2 தினங்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கப்படுகிாம்.

இந்த நிலையில், கூடுதலாகக் குடிநீா் கிடைக்கும் வகையில் பெத்தூா்-மொரப்பூா் செல்லும் சாலையோரத்தில் மின்மோட்டாா் வசதியுடன்கூடிய ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மின்மோட்டாா் பழுதாகி 6 மாதங்களுக்கும் மேலாக பயனற்று உள்ளதாம்.

இதனால், பாப்பிசெட்டிப்பட்டியில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, பழுதாகியுள்ள ஆழ்துளைக் கிணற்றின் மின்மோட்டாரை சீரமைப்பு செய்து தட்டுப்பாடின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com