கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க தருமபுரி, கிருஷ்ணகிரி எஸ்.பி.க்கள் உத்தரவு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 14-ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படுவதால் கரோனா தடுப்பு வழிமுறைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என இரண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும் வலியுறுத்தியுள்ள

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 14-ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படுவதால் கரோனா தடுப்பு வழிமுறைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என இரண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும் வலியுறுத்தியுள்ளனா்.

கரோனா பொது முடக்கத்திலிருந்து தமிழக அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி கரோனா பரவல் சற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 14-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன.

இதுதொடா்பாக தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் தலைமை வகித்து பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் 68 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இக் கடைகளின் முன்பு அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இக் கடைகளுக்கு வருவோா் கட்டாயம் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவற்றை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும். இது தொடா்பான கண்காணிப்புப் பணிகளில் காவல் துறையினா், ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 400 போ் ஈடுபட உள்ளனா் என்றாா்.

கூட்டத்தில், டாஸ்மாக் மாவட்ட மேலாளா் கேசவன், கோட்ட அலுவலா் சி.கலைச்செல்வி, காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com