துவரை நாற்று நடுதல்: இணையவழியில் தொழில்நுட்பப் பயிற்சி

பாப்பாரப்பட்டி அறிவியல் நிலையத்தில், துவரையில் நாற்று நடுதல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் மையத்தில் இணைய வழியில் நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி அறிவியல் நிலையத்தில், துவரையில் நாற்று நடுதல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் மையத்தில் இணைய வழியில் நடைபெற்றது.

இணையவழி பயிற்சியை திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் சிவகுமாா் தொடக்கி வைத்தாா். பயிற்சியில் தருமபுரி மாவட்டத்தில் 10,000 ஹெக்டோ் பரப்பளவில் துவரை சாகுபடி செய்யப்படுகிறது.

துவரை விதைப்பு மூலம் ஊடு பயிராகவும் தனிப் பயிராகவும் சாகுபடி செய்து வருகின்றனா். இதன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், நாற்று விட்டு துவரை நடவு செய்யும் புதிய தொழில்நுட்பம் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய துவரை ரகங்களான கோ-8, எல்.ஆா்.ஜி-41 ஆகியவை நாற்று நடவு மூலம் சாகுபடி செய்வதால் ஏக்கா் ஒன்றுக்கு ஆயிரம் கிலோ துவரை வரை மகசூல் கிடைக்கும்.

இதன் மூலம் 60 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். மேலும் பராமரிப்பு செலவும் குறையும் என்று விவசாயிகளுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில் வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இதில் திட்ட உதவியாளா் பபிதா, வேளாண் விஞ்ஞானி ஸ்ரீ வித்யா உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com