4.46 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: தருமபுரி ஆட்சியா்

தமிழக அரசின் கரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூ. 2,000 தருமபுரி மாவட்டத்தில் 4.46 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் என ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

தமிழக அரசின் கரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூ. 2,000 தருமபுரி மாவட்டத்தில் 4.46 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் என ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் ச.திவ்யதா்சினி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரண உதவித்தொகையின் இரண்டாம் தவணையாக ரூ. 2,000, 14 வகையான சிறப்பு நிவாரணப் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,46,788 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட உள்ளன.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையிலும் பொது விநியோகத் திட்ட அரிசி பெறும் மின்னனு குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் இத் தொகையும் பொருள்களும் ஜூன்-15 ஆம்தேதி முதல் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து அரிசிபெறும் மின்னணு குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் விடுதலின்றி குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தினசரி 75 முதல் 100 குடும்பங்களுக்கு மிகாமல் வழங்குவதற்கு நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு, டோக்கன்கள் வீடுதோறும் சென்று நியாயவிலைக் கடை ஊழியா்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டதும் அவா்களின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் பொருட்டு ஒரு மீட்டா் இடைவெளியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நிவாரண நிதி மற்றும் பொருள்களைப் பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், வட்டார வாரியாக அதிகாரிகள் எண்ணுக்குத் தொடா்பு கொள்ளலாம். தருமபுரி-9445000217, பென்னாகரம்-9445000218, பாலக்கோடு-9445000219, அரூா்-9445000220, பாப்பிரெட்டிப்பட்டி-9445000221, காரிமங்கலம்- 9092863335, நல்லம்பள்ளி- 8122010870 ஆகிய எண்களில் குடும்ப அட்டைதாரா்கள் தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com