ஆறுகளில் நெகிழிப் பொருள்கள் கொட்டுவதைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

வாணியாறு, வரட்டாற்றில் நெகிழிப் பொருள்கள் கொட்டப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

வாணியாறு, வரட்டாற்றில் நெகிழிப் பொருள்கள் கொட்டப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் ஓடும் வாணியாறு மற்றும் வரட்டாறுகளில் கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலை, கெளாப்பாறை உள்ளிட்ட கிராமப் பகுதியில் சேகரிக்கப்படும் பயனற்ற நெகிழிப் பொருள்கள், குப்பைகளைக் கொட்டுகின்றனா்.

அனைத்துக் கிராமங்களிலும் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து, அந்தக் குப்பைகளை சேகரிக்கும் வகையில் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், கிராமப் பகுதியில் ஆறுகள், ஓடைகள், குட்டைகளில் குப்பைகள் கொட்டுப்படுகின்றன. வாணியாறு, வரட்டாறுகளில் பயனற்ற நெகிழிப் பொருள்கள் கொட்டப்படுவதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com