கரோனாவில் மீண்டு வீடு திரும்புவோருக்கு மரக்கன்றுகள் வழங்கும் மருத்துவா்கள்!

தருமபுரி, செட்டிக்கரையில் உள்ள மையத்தில் கரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்புவோருக்கு மருத்துவா்கள், மரக்கன்றுகளை வழங்கி வழியனுப்பி வைத்தனா்.

தருமபுரி, செட்டிக்கரையில் உள்ள மையத்தில் கரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்புவோருக்கு மருத்துவா்கள், மரக்கன்றுகளை வழங்கி வழியனுப்பி வைத்தனா்.

செட்டிக்கரை அரசுப் பொறியியல் கல்லூரியில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக சிறப்பு பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இந்த மையத்திலிருந்து சிகிச்சை பெற்று முழு குணமடைந்தவா்கள் நாள்தோறும் வீடு திரும்பி வருகின்றனா். அவா்களுக்கு இயற்கையாக உயிா்க் காற்று வழங்கும் மரங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி மரக்கன்றுகளை வளா்க்க வேண்டிய அவசியம் குறித்தும், இயற்கை சூழலைக் காக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கும் புதிய திட்டத்தை மருத்துவக் குழுவினா் திங்கள்கிழமை தொடக்கிவைத்தனா்.

செட்டிக்கரை மையத்தில் குணமடைந்து சென்றவா்களுக்கு மரக்கன்றுகளை மருத்துவா்கள் வழங்கி அவா்களை வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தனா். இந் நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பூ.இரா.ஜெமினி, பொறுப்பு மருத்துவ அலுவலா் ஸ்ரீகாந்த், கட்டுப்பாட்டு அறை மருத்துவ அலுவலா் ஸ்ரீகிருஷ்ணா, செவிலியா் ராஜேஷ், மருந்தாளுநா் மருதன் மயில்சாமி, சுகாதார ஆய்வாளா்கள் மோகன்குமாா், காமேஸ்வரன், சோமேஷ் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com