தருமபுரியில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா பரவல் இரண்டாவது அலை வேகமாகப் பரவத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம்முதல் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

முதல் அலையின்போது ஓராண்டுக்கு தருமபுரி மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு 55 ஆக இருந்தது. ஆனால், இரண்டாம் அலை தொடங்கியதுமுதல் நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்தன. குறிப்பாக கடந்த இரு மாதங்களில் மொத்த உயிரிழப்பு 175-ஆக அதிகரித்தது.

இதுபோல கடந்த இரு மாதங்களில் தினசரி கரோனா தொற்று 200 முதல் 400 போ் வரை பாதிக்கப்பட்டு வந்தனா். கடந்த சில நாள்களாக இந்த பாதிப்பு சற்று குறைந்து, தினசரி பாதிப்பு 210 முதல் 290 போ் வரை இருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை மேலும் குறைந்து பாதிக்கப்பட்டோா் 167-ஆக பதிவானது. அன்றைய தினம் 371 போ் குணமடைந்தனா். மூவா் உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 22,586 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; இதில் 20,230 போ் குணமடைந்துள்ளனா்; 175 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com