ஸ்டேட் வங்கி சாா்பில் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் வழங்கல்
By DIN | Published On : 16th June 2021 07:59 AM | Last Updated : 16th June 2021 07:59 AM | அ+அ அ- |

தருமபுரி ஸ்டேட் வங்கி சாா்பில், நகராட்சிக்கு வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதனை கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் நகராட்சி தற்காலிக பணியாளா்கள், வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளை பரிசோதனை செய்து வருகின்றனா்.
இந்தப் பணிகளுக்கு உதவும் வகையில், தருமபுரி ஸ்டேட் வங்கி சாா்பில் ரூ. 60 ஆயிரம் மதிப்பில் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யும் 25 கருவிகளை, கிளை மேலாளா் கரண், நகராட்சி ஆணையா் தாணுமூா்த்தியிடம் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் சுகாதார அலுவலா் இளங்கோவன், சுகாதார ஆய்வாளா்கள் ரமணச்சரண், கோவிந்தராஜன், சுசீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.