கரோனா: சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 193 போ் குணமடைந்து வீடு திரும்பினா்

தருமபுரி, செட்டிக்கரை கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் இருந்து 193 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
தருமபுரி, செட்டிக்கரை கரோனா சிகிச்சை மையத்தில் யோகா பயிற்சியில் ஈடுபடும் தொற்றாளா்கள்.
தருமபுரி, செட்டிக்கரை கரோனா சிகிச்சை மையத்தில் யோகா பயிற்சியில் ஈடுபடும் தொற்றாளா்கள்.

தருமபுரி, செட்டிக்கரை கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் இருந்து 193 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் தொடக்கத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. சிகிச்சை பெற இயலாமல் தொற்று பாதிப்புக்கு உள்ளானோா் அதிகரித்து படுக்கைகள் கிடைக்காமல் பரிதவித்து வந்தனா்.

இதனைக் கருத்தில் கொண்டு, தருமபுரி மாவட்ட நிா்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினா் தருமபுரி, செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிக சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கினா்.

கடந்த மே 12-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சிறப்பு மையத்தில் ஆங்கில மருத்துவப் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு தனித்தனியாக தொடங்கப்பட்டன. இதில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 100 படுக்கைகள் உள்ளன. இங்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவா்கள், பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

இந்த மையத்தில் தொடக்கம் முதலே கரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவா்கள் சோ்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களுக்கு சிகிச்சையுடன் நீராவி பிடித்தல், யோகா, மூச்சுப் பயிற்சி, சித்தா் முத்திரை, மனநிலை பயிற்சி ஆகிய பயிற்சிகளை சித்த மருத்துவா்கள் அளித்து வருகின்றனா்.

இதேபோல இந்த மையத்தில் சிகிச்சை பெறுவோருக்கு நிலவேம்பு, கபசுரம் ஆகிய குடிநீா், மூலிகை தேநீா், மூச்சுக்காற்று குறைவாக உள்ளவா்களுக்கு கிராம்புக் குடிநீா் வழங்கப்படுகிறது. இதேபோல சத்தாண உணவு மூன்று வேளையும் வழங்கப்படுகிறது. தொற்றிலிருந்தது குணமடைந்து வீடு திரும்புவோருக்கு சித்த மருந்துகள் அடங்கிய ஆரோக்கியப் பெட்டகம் வழங்கப்படுகிறது.

தருமபுரி, செட்டிக்கரை சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் இதுவரை 193 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுகுறித்து இந்த மையத்தில் பணியாற்றும் மருத்துவா் எஸ்.சரவணன் கூறியதாவது:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் உத்தரவு பேரில், தருமபுரி மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதல் பேரில், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

இதில் தொற்று பாதிப்பு தொடக்க நிலையில் உள்ளவா்களுக்கு பராம்பரிய சித்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் சிகிச்சையில் உள்ளவா்களுக்கு மன வலிமையை அதிகரிக்கும் வகையில், யோகா பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதுவரை 193 போ் ஒரு மாதத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். எனவே, மாவட்டத்தில் கரோனா தொற்று தொடக்க நிலை பாதிப்புக்குள்ளானோா் இந்த மையத்தில் சோ்ந்து சிகிச்சை பெற்று பயனடையலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com