முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
காப்பீட்டு ஊழியா்கள் கருத்தரங்கு
By DIN | Published On : 04th March 2021 04:26 AM | Last Updated : 04th March 2021 04:26 AM | அ+அ அ- |

தருமபுரி: காப்பீட்டுத் துறை பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிராக, தருமபுரி காப்பீட்டுத் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.
இக் கருத்தரங்குக்கு, காப்பீட்டுத் துறை ஊழியா் சங்க கோட்ட இணைச் செயலா் மாதேஸ்வரன் தலைமை வகித்து பேசினாா். தருமபுரி கிளைச் செயலா் மகேந்திரன் வரவேற்றாா். கோட்ட இணைச் செயலா் ஏ.கலியபெருமாள், சிஐடியு மாநிலச் செயலா் சி.நாகராஜன் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் மணி, தொமுச மாவட்டச் செயலா் சண்முராஜா, அனைத்து வணிகா் சங்க பேரவைத் தலைவா் வைத்திலிங்கம் ஆகியோா் பேசினா்.
இதில், காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீடு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயா்த்தி, நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததை திரும்பப் பெற வேண்டும். காப்பீட்டுத் துறை உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க நிா்வாகிகள் பேசினா்.