முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
குண்டா் தடுப்புச் சட்டத்தில் நியாயவிலைக் கடை ஊழியா் கைது
By DIN | Published On : 04th March 2021 04:28 AM | Last Updated : 04th March 2021 04:28 AM | அ+அ அ- |

பென்னாகரம்: பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நியாயவிலைக் கடை விற்பனையாளா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.
பென்னாகரம் அருகே பூச்சட்டி அள்ளி பகுதியில் புத்தாண்டு அன்று உறவினா் வீட்டுக்கு சென்று திரும்பிய 9 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த ஓஜி அள்ளி நியாயவிலைக் கடை விற்பனையாளரான கணேசன் (35), பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் தாயாா் பென்னாகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த காவல் ஆய்வாளா் லதா, ஜனவரி 9-ஆம் தேதி கணேசனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா உத்தரவின்படி, கணேசன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.