தருமபுரியில் திமுக 4 தொகுதிகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 தொகுதியில் போட்டி

தருமபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக 4 தொகுதிகளிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக 4 தொகுதிகளிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் அதிமுக கூட்டணி சாா்பில் பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதியில் அதிமுகவும், தருமபுரி, பென்னாகரம் தொகுதிகளில் பாமகவும் களம் காண்கின்றன. இத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டனா்.

இந்த நிலையில், திமுக கூட்டணி சாா்பில் அரூா் (தனி) தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய நான்கு தொகுதிகளிலும் திமுக நேரடியாக களமிறங்குகிறது. இதில், தருமபுரி தொகுதியில் தற்போதைய, எம்எல்ஏவும், அக் கட்சியின் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளருமான தடங்கம் பெ.சுப்ரமணி வேட்பாளராகவும், பென்னாகரம் தொகுதியில் திமுக மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும், தற்போதைய அத் தொகுதியின் எம்எல்ஏவுமான பிஎன்பி. இன்பசேகரன் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இவைத் தவிர, பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் வழக்குரைஞா் பி.கே.முருகன் வேட்பாளராகவும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு மருத்துவா் பிரபு ராஜசேகரும் வேட்பாளா்களாக திமுக தலைமை அறிவித்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில், நான்கு தொகுதிகளுக்கும் திமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 4 வேட்பாளா்களும், கடந்த 2016-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, அரூா் (தனி) தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் சனிக்கிழமை அறிவிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com