முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கிராமியக் கலைஞா்கள் விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 14th March 2021 03:26 AM | Last Updated : 14th March 2021 03:26 AM | அ+அ அ- |

இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்திய மகளிா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, கிராமியக் கலைஞா்கள், மகளிா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் பேரணியில், கலைஞா்கள், மகளிா் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். தருமபுரி ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேரணியைத் தொடங்கி வைத்து ஆட்சியா் ச.ப.காா்த்திகா பேசினாா்.
இதில், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. தோ்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பேரணியில் பங்கேற்ற மகளிா் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து, தருமபுரி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வாக்களிக்கும் முத்திரையில் ஒரு சேர நின்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்த நிகழ்ச்சில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் கவிதா, முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியா் சாந்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நாராயணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாச சேகா், உதவி திட்ட அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.