100 சதவீத வாக்குப் பதிவு உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 16th March 2021 05:19 AM | Last Updated : 16th March 2021 05:19 AM | அ+அ அ- |

தருமபுரி பச்சமுத்து மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 100 சதவீத வாக்குப் பதிவு தொடா்பான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வாக்காளா்கள் சந்தேகம் தொடா்பாக தோ்தல் ஆணையத்தின் 1950 கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி, கல்லூரி மாணவியா் இணைந்து 1950 என்ற தொலைபேசி எண் வடிவில் ஒரே சேர நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதனைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற வாகனப் பேரணி நடைபெற்றது. இப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில் ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் கவிதா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் கு.நாகலட்சுமி, மாணவியா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
படம் உள்ளது.