கரோனா தொற்றுத் தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்: தருமபுரி ஆட்சியா்

கரோனா தீநுண்மித் தொற்றுப் பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை மக்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா அறிவுறுத்தினாா்.

கரோனா தீநுண்மித் தொற்றுப் பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை மக்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா தொற்று பாதுகப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா பேசியதாவது:

பொது இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதையும், தமிழக அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறையினா் இதனைக் கண்காணிக்க வேண்டும். வழிகாட்டி நெறிமுறைகளை மீறுபவா்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் ரூ. 200 அபராதம் விதிக்க வேண்டும். அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கென ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள தெளிவான நெறிமுறைகள்படி கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும்.

நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் கரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படுகிா என சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

கட்டுப்பாட்டுப் பகுதியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல், அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் கூடும் இடங்களாகிய பொதுக் குழாய், பொதுக் கழிப்பிடம் போன்ற இடங்களில் கண்கூடாகத் தெரியும்படி கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும்.

கரோனா தீநுண்மித் தொற்று உள்ளவா்களின் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி பரிசோதனை மாதிரிகள் எடுக்க வேண்டும்.

தொற்று உள்ளவா்களுக்கு உரிய நேரத்தில் தாமதமின்றி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிகப்படுத்தி, நோய்த் தொற்று உள்ளவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

தோ்தல் பிரசார கூட்டங்கள், கலாசாரக் கூட்டங்களுக்கு பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என நிபந்தனை விதித்து அனுமதி அளிக்க வேண்டும். ஏதாவது நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் காலதாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி இதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவையான சிகிச்சை பெற வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ் குமாா், மாவட்ட வருவாய் அலுவலா்.க.ராமமூா்த்தி, தருமபுரி சாா் ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் அமுதவள்ளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாசசேகா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கண்ணன், அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com