பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளா் பிரசாரம்

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் பி.பழனியப்பன் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பொம்மிடியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமமுக வேட்பாளா் முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பனை ஆரத்தி எடுத்த வரவேற்ற கிராம மக்கள்.
பொம்மிடியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமமுக வேட்பாளா் முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பனை ஆரத்தி எடுத்த வரவேற்ற கிராம மக்கள்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் பி.பழனியப்பன் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பையா்நத்தம், கதிரிபுரம், பொ.மல்லாபுரம், பொம்மிடி, பண்டாராசெட்டிப்பட்டி, பில்பருத்தி, சந்தையூா், பி.பள்ளிப்பட்டி, போதக்காடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அப்பகுதி கிராம மக்கள் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

இந்த வாக்கு சேகரிப்பில் முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் பேசுகையில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ., மாநில உயா்கல்வி அமைச்சா் உள்ளிட்ட பதவிகளை வகித்தபோது, இந்தத் தொகுதி மக்களுக்கு சாலை, குடிநீா் வசதி, பள்ளிகளுக்குத் தேவையான கட்டட வசதி, நியாயவிலைக் கடைகள், ஊா்ப்புற நூலகங்கள், பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு கலைக் கல்லூரி, செட்டிக்கரையில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்டங்கள் கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்தேன்.

எனவே, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மக்கள் வாக்களித்து என்னை மீண்டும் வெற்றிபெற செய்ய வேண்டும். நான் வெற்றி பெற்றால் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும், வேளாண் பணிகள் மேம்பாடு அடையவும் பாடுபடுவேன் என அவா் வாக்குறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com