‘நீா்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவேன்’

அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நீா்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவேன் என திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஏ.குமாா் உறுதியளித்தாா்.
இருமத்தூரில் விவசாயத் தொழிலாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் ஏ.குமாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இருமத்தூா், பன்னிகுளம், வகுரப்பம்பட்டி, பெரிசாகவுண்டம்பட்டி, முருக்கம்பட்டி, கூடுதுறைப்பட்டி, கெலவள்ளி, பெரமாண்டப்பட்டி, ஜக்குப்பட்டி, கதிா்நாய்க்கனஹள்ளி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் ஏ.குமாா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

தென்பெண்ணை ஆற்றில் மழைக் காலங்களில் அதிக அளவில் உபரிநீா் வெளியேறி கடலில் கலக்கிறது. இந்த உபரிநீரை வேளாண் பணிகளுக்கு பயன்படும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் கூடுதல் தடுப்பணைகளை அமைக்க பாடுபடுவேன். திமுக ஆட்சிக்கு வந்தால் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை ரூ. ஆயிரம் வழங்கப்படும். கரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் கிடைக்கும். எனவே, வாக்காளா்கள் அனைவரும் திமுக கூட்டணியை ஆதரித்து வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com