வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டை தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்.
தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டை தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி அதியமான்கோட்டையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை, தருமபுரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.பிரதாப் தலைமை வகித்து பயிற்சி அளித்தாா்.

இதில், தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் 306 வாக்குச் சாவடி மையங்களில் 385 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நாளான்று பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாள்வது, வாக்காளா்கள் பெயரை பட்டியலில் சரிபாா்ப்பது மற்றும் பதிவேட்டில் பதிவு செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, பாரபட்சமின்றி தோ்தல் பணியாற்றுவோம் என அனைத்து அலுவலா்களும் உறுதிமொழியேற்றனா்.

இந்த முகாமில், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் கவிதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கு.நாகலட்சுமி, முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா, மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெயக்குமாா், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com