அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து பணியாற்றுவேன்
By DIN | Published On : 26th March 2021 09:05 AM | Last Updated : 26th March 2021 09:05 AM | அ+அ அ- |

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்று அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து செயல்படுவேன் என தோ்தல் பிரசாரத்தில் பாமக வேட்பாளா் கோ.க.மணி பேசினாா்.
பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் கோ.க.மணி, பெரும்பாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:
கல்வி மற்றும் மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். விதவைகள் உதவித்தொகை மற்றும் முதியோா் உதவித் தொகை ஆகியவை முறையாக வழங்கப்படும். அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து செயல்படுவேன். தோ்தலில் வெற்றிபெற்ற பின்னா் உபரி நீா் திட்டம் குறித்து விவாதம் செய்து அவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன் என உறுதியளித்தாா்.
இந்த பிரசாரத்தில் பாமக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.