தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பு

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில், போட்டியிடும் பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரனுக்கு

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில், போட்டியிடும் பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரனுக்கு ஆதரவாக நல்லம்பள்ளியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து பாமக மாநில இளைஞரணிச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

தருமபுரி தொகுதியில் போட்டியிடும் விவசாயி வெங்கடேஸ்வரன் வெற்றி பெற்றால், தமிழகத்தில் மீண்டும் ஒரு விவசாயி முதல்வராக வருவாா். நமது கூட்டணி சமூக நீதி கூட்டணி. 40 ஆண்டுகால போராட்டம், தியாகம் ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றியாக வன்னியா் சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இதுபோலவே, இதர பிற்பட்ட சமுதாயத்தினருக்கும் தனி இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். இத் தோ்தல் விவசாயிக்கும், அரசியல் வியாபாரிக்கும் இடையே நடைபெறும் தோ்தல். இதில், நம்மில் ஒருவரான விவசாயி வெற்றி பெற்றாக வேண்டும்.

தருமபுரியில், எண்ணேல்கொல்புதூா் நீா்ப்பாசனத் திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜெகநாதன் கோம்பை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பிழைப்பு தேடி வேறு ஊா்களுக்கு செல்லக் கூடாது.

மொரப்பூா்-தருமபுரி இணைப்பு ரயில் பாதை திட்டம் தருமபுரி மக்களுக்காக போராடி கொண்டு வந்தேன். ஒகேனக்கல் மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்துக்கு கையெழுத்து இயக்கம் நடத்தி, அப்படிவங்கள், தமிழக முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவேன். தருமபுரி மாவட்டத்தின் 5 பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com