முக்குளம், பொம்ம அள்ளியில் கே.பி.அன்பழகன் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 26th March 2021 09:05 AM | Last Updated : 26th March 2021 09:05 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட முக்குளம், பொம்ம அள்ளி உள்பட 5 ஊராட்சிகளில் அமைச்சா் கே.பி.அன்பழகன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் அமைச்சா் கே.பி.அன்பழகன், அத் தொகுதிக்கு உள்பட்ட முக்குளம், பொம்மஅள்ளி, தும்லஅள்ளி, கெண்டிகானஅள்ளி, புலிக்கல் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தோ்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
தற்போது தோ்தல் அறிக்கையில், மகளிருக்கு ரூ. 1,500 உதவித் தொகை, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள், மகளிருக்கு வாஷிங் மெஷின் என ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் நிறைவேற்றித்தரப்படும் என்றாா்.