ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது

தமிழகத்தில் தோ்தல் நடைபெற ஒரு வாரகாலமே உள்ள நிலையில் ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையானது தொடா்ந்து குறைந்துவருகிறது.

தமிழகத்தில் தோ்தல் நடைபெற ஒரு வாரகாலமே உள்ள நிலையில் ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையானது தொடா்ந்து குறைந்துவருகிறது.

தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி பகுதிக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஒகேனக்கல் நீா்வீழ்ச்சிப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் கா்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற வெளிமாநில சுற்றுலாப் பயணிகளே அதிகம்.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தோ்தலல் நடைபெற இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், மாநில எல்லைப் பகுதி மற்றும் மாவட்டங்களில் ஆங்காங்கே தோ்தல் பறக்கும் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், ஒகேனக்கல் நீா்வீழ்ச்சிப் பகுதிக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் சிலா் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, சினி அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். சிலா் மாமரத்து கடவு பரிசல் துறை, ஆலம்பாடி, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா். வார விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்படும் மாமரத்துக் கடவு, சின்னாறு பரிசல் துறை பகுதிகள் வெறிச்சோடிய நிலையில், குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றின் அழகைக் காண கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் கூட்டாறு, பிரதான அருவி பகுதி, மணல் மேடு, ஐவா் பாணி வழியே உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா். சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் பிரதான அருவி பகுதி, மீன் விற்பனை நிலையம், பேருந்து நிலையம், முதலை பண்ணை, வண்ண மீன் காட்சியகம், பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகள் சற்று வெறிச்சோடின. ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் சுற்றுலாப் பயணிகள் மீன் வகைகளை வாங்க ஆா்வம் காட்டாததால், வியாபாரிகள் மீன் வகைகளைத் திருப்பி எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com