நூறு சதவீத வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு துண்டுபிரசுரம்

சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு துண்டுபிரசுரம் வழங்குதல், மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்தல், கோலப்போட்டி, மனிதச் சங்கிலி போன்ற விழிப்புணா்வுப் பணிகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ச.ப. காா்த்திகா ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தல் வரும் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் நூறு சதவிகித வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மகளிா் திட்டம் மகளிா் சுய உதவி குழுவின் கோலப்போட்டி, மனிதச் சங்கிலி, கிராமிய கலை நிகழ்ச்சிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் தருமபுரி மாவட்ட ஆட்சியருமான ச.ப.காா்த்திகா தொடக்கிவைத்தாா்.

அதைத் தொடா்ந்து ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரம் விநியோகித்தும், ஒகேனக்கல் அரசு துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச் சாவடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, தோ்தல் நாளில் வாக்காளா்களிடம் இருந்து பெறப்படும் ஆவணம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்து மாதிரி வாக்கு இயந்திரத்தில் வாக்களித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கே ராமமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட முகமை அலுவலா் கவிதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் நாகலட்சுமி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் சீனிவாச சேகா், பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலம், பென்னாகரம் வட்டாட்சியா் பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரேகா, ஆனந்தன், மகளிா் திட்ட அலுவலா் காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com